வியாழன், 12 ஏப்ரல், 2012

தொடர்கதை

  1. மக்கள் பொன்னும் பொருளும் சேர்ப்பதற்காக முடிந்தவரை எல்லா வழியிலும் முயற்சிப்பார்கள்.  உயிரைக்கூட பணயம் வைப்பார்கள் என்றுதானே பார்த்திருப்போம், கேட்டிருப்போம்.  நேற்று பூகம்பம் வந்த இரண்டு மணிக்கு அடுக்கு மாடிக் குடியிருப்புக்களில் குடியிருப்போர் போட்டது போட்டபடி கதவைக்கூட சாத்தாமல் படிகளில் இறங்கி ஓடி வெளியில் வந்து நின்றனர். அப்போதுதான் நான் நினைத்தேன் மனிதனுக்கு உயிருக்கு அப்புறம்தான் எல்லாம் என்று. ஆனால் எல்லாம் அந்த சில நிமிடங்களுக்கு மட்டும்தான்.  பழையபடி நிலையாமை அவர்களுக்குத் தோன்றுவதே இல்லை. எல்லா தீமைகள் நேர்வதும் அதனால்தான் என்று தெரிந்தும் அது தொடர்கதையாகிறது.